Wednesday, November 03, 2010

தீபாவளி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Friday, October 08, 2010

My gmail has been hacked

My gmail account has been hacked today and all the messages in sent folder been deleted.

delete the messages from my email with message as
http://gruppo24.it/mas5.html

Friday, July 09, 2010

Kaila bala's albums

This is the Picasa link of the Albums by Mr.Kaila Bala from  Malaysia
Containing photos from his visits to Sathuragiri,Parvathamalai,Tiruvannamalai and Kailasah-Manasarovar
Our thanks for him to give permission to view these photos

http://picasaweb.google.com/kailaibala

Monday, May 31, 2010

வைகாசி விசாகம் 2010

இந்த ஆண்டு வைகாசி விசாகம் மண்டபக்கட்டளைகளின்போதும் 4ம் திருவிழாவின்போதும் எடுக்கப்பட்ட படங்களின் இணைப்பு கீழே உள்ள லிங்க்கில்
 http://picasaweb.google.com/m.prakasham/2010

Sunday, May 23, 2010

செங்கோட்டுவேலவர்


22-5-2010 4ம் திருவிழாவை முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவப் பெருமாளை வரவேற்க மலையடிவாரத்தில் காத்திருக்கும் செங்கோட்டுவேலவர்

Saturday, May 22, 2010

ஆதிகேசவப்பெருமாள் 22-5-2010




22-5-2010   4ம் திருவிழா தினத்தில் செங்குந்த முதலியார்கள் மண்டபக்கட்டளையின்போது ஆதிகேசவப்பெருமாள் சிறப்பான அலங்காரத்தில் வெள்ளிக் கவசத்துடன் சப்பரத்தில்

அர்த்தநாரீஸ்வரர் 22-5-2010


22-5-2010   4ம் திருவிழா தினத்தில் செங்குந்த முதலியார்கள் மண்டபக்கட்டளையின்போது அர்த்தநாரீஸ்வரர் சிறப்பான அலங்காரத்தில் வெள்ளி சப்பரத்தில்

திருச்செங்கோடு நாகர்

22-5-2010 4ம் திருவிழா முன்னிட்டு அலங்காரத்தில் நாகர்பள்ளம் நாகர்

வேப்பம்பூதான்-- கொஞ்சம் க்ளோசப்பில்

Wednesday, April 07, 2010

திருச்செங்கோடு தேர்... -- சந்தோஷ் செல்வராஜன்

I am happy to publish this kavithai about Tiruchengode Ther by our fellow blogger Santhosh selvarajan. 

திருச்செங்கோடு  தேர்... 


From Tiruchengode Arthanareeswarar Temple

உயரமோ நான்குமாடி கட்டிடம்
அகளமோ இரண்டானை தடினம்
நான்கு எழடிஉயர சக்கரம்
தேர் சுற்றிலும் பூமாலை தோரணம்சப்பரம் நடுவில் அர்த்தனாரிஸ்வரர் திருக்கோலம்
திரண்டிருந்த மக்களோ பல்லாயிரம்!!!


தேர் சுற்றிவர நான்கு‍‍‍- ரத வீதி
சுற்றிமுடிக்க மூன்று - நாள் தேதி
அன்று தேர் நில‌ம்சேறும் க‌டைசி தேதி!!!


அர்ச்ச‌னை ப‌ல‌முடிந்து முற்ப‌க‌ல் முன்ந‌ட‌க்க‌
ப‌ட்டாசு வேட்டு முழ‌ங்க‌ யானைக‌ள் பின்ந‌ட‌க்க‌
விள‌ம்ப‌ர‌ங்க‌ள் கூவிட‌ ஊர் ம‌க்க‌ள் திற‌ன்டிட‌
அர‌ம்ப‌மாயிற்று அன்றைய‌ தேர்‍‍‍‍‍ ப‌வ‌ன‌ம்!!!


இரும்பு வ‌ட‌ம் தேரில்பூட்ட‌ - அரைமைல் க‌ல்
நீண்ட‌து அந்த‌ க‌ன‌த்த‌ இரும்பு ச‌ங்கிலி
சுற்றியிருந்த‌ ம‌க்க‌ள் கைபிடிக்க‌
நானும் முன்னேறினேன் அதை பிடிக்க‌
ஆனால் கிடைக்க‌ பெற்ற‌தோ கைக‌ள்தான்-
ச‌ங்கிலி இல்லை!!!


சாணை க‌ட்டைக‌ள் முட்டுகுடுக்க‌
ஊதுவோர் ஊத.. யானைக‌ள் முட்ட‌
கையோடு கை சேர்த்து கை‍-ச‌ங்க‌லியால் தேரை க‌ட்டியிழுக்க‌
அசைந்தாடிய‌து அழங்கார‌ குன்று!!!


வெற்றுகாலை வெயில் வெட்டியெடுக்க‌
முன்னெறினோம் ம‌திய‌வெயிலில் ம‌ண்டைபிள‌க்க‌!!!


குழந்தையை போல் அசைந்தாடியும்
கும‌ரி போல் அண்ண‌ந‌டையும்
ப‌ருவ‌ப்பெண் போல் க‌டைக‌ண்பார்த்தும்
நில‌ம்சேர்ந்த‌து அம்மைய‌ப்ப‌ன் தேர்!!!


சந்தோஷ் செல்வராஜன்
திருசெங்கோடு / டோக்யோ

குறிப்பு:

1. நில‌ம் சேர்த்த‌ல் = தொட‌ங்கிய‌ இட‌ம் வ‌ந்து சேர்த‌ல்
2. அர்த்தனாரிஸ்வரர் = அம்மைய‌ப்ப‌ன் = ஆண்பாதி (சிவ‌ன்) பெண் பாதி (பார்வ‌தி) க‌ல‌ந்த‌ தோற்ற‌ம்.இவ்வாறான‌ சிவ‌‍-பார்வ‌தி தோற்ற‌த்தை திருச்செங்கோட்டில் ம‌ட்டுமே பார்க்க‌ முடியும். இது இத்திருத‌ல‌த்தின் சிற‌ப்ப‌ம்ச‌மாகும்.

Sunday, January 10, 2010

Virtual tour of Tourist centres of Tamilnadu

தமிழகத்தின் சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட இடங்கள் 360 டிகிரி பார்வையில் (Flash player needed)

http://view360.in/

Photo from another blog



The owner of the blog has given comment as
behind every happy woman, there will be a crying man
கூகிள் மேப்பில் திருச்செங்கோடு நகரின் தோற்றம்

Tiruchengode in Google map

Saturday, January 09, 2010

Online Dictionary

ஆன்லைனில் ஆங்கில வார்த்தைகளுக்குப் பொருள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
 
 

Wednesday, January 06, 2010

திருச்செங்கோடு ஆஞ்சனேயர்

திருச்செங்கோடு அக்ரஹாரம் ஆஞ்சனேயர் ஆலயத்தில் ஆஞ்சனேயர் உற்சவர்
 
ஒவ்வொரு மாதம் மூலம் நட்சத்திர தினத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறும்

திருச்செங்கோடு சீதாராமர்

 
திருச்செங்கோடு அக்ரஹாரம் ஆஞ்சனேயர் ஆலயத்தில் உள்ள சீதாராமர் உற்சவர்

பொங்கல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Weather report of Tiruchengodu

திருச்செங்கோடு நகரின் தினசரி தட்பவெப்பநிலை அறிய இங்கே க்ளிக் செய்யவும்    http://weather.weatherbug.com/India/Tiruchengodu-weather/local-forecast/7-day-forecast.html?ZCode=z5814

Tuesday, January 05, 2010



12-12-2008 அன்று திருச்செங்கோடு மலையில் கார்த்திகை தீப ஒளியில் அம்மையப்பன் வடிவம் தெரிந்த காட்சி

ஒளிப்படம் எடுத்தவர் புகைப்படக்கலைஞர்
திரு ஹிதாயத்துல்லா,திருச்செங்கோடு.


திருச்செங்கோடு ஆறுமுகசுவாமி அலங்காரத்தில்


5-8-2008 நாகபஞ்சமி தினத்தில்
திருச்செங்கோடு நாகர்பள்ளத்தில் 60 அடி நீள
நாகருக்கு 108 குடம் பாலபிஷேகம்


5-8-2008 நாகபஞ்சமி தினத்தில் நாகர்பள்ளம் நாகர், அலங்காரத்தில்


திருச்செங்கோடு மலையில் 1008(ஸஹஸ்ர)லிங்கம்

குஞ்சுமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்



திருச்செங்கோடு,(தமிழ்நாடு,நாமக்கல் மாவட்டம்)அருள்மிகு குஞ்சுமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகக் காட்சி 02-07-2009
திரு. விஜய சுப்ரமண்ய சிவாச்சாரியார் தலைமையில்
[இந்த ஆலயத்திற்கு அவர் நடத்தும் மூன்றாவது கும்பாபிஷேகம் இது]


மேகக் கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் திருச்செங்கோடு மலை 08-11-2009 அன்று


திருச்செங்கோடு குஞ்சுமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் சிறந்த முறையில் வீணை இசை வழங்கிய திருமதி மயிலாம்பிகா கோபாலகிருஷ்ணன்

ஆபத்துக்காத்த வினாயகர்




ஆடிவெள்ளி சிறப்பு அலங்காரத்தில் திருச்செங்கோடு அருள்மிகு ஆபத்துக்காத்த
வினாயகப் பெருமான்

திருச்செங்கோடு தங்கரதம், வெள்ளோட்டதினத்தில்


தங்கரத வெள்ளோட்டத்தின்போது சிறப்பான வாணவேடிக்கை-2

தங்கரத வெள்ளோட்டத்தின்போது சிறப்பான வாணவேடிக்கை

திருச்செங்கோடு தங்கரத வெள்ளோட்டம்


அர்த்தநாரீஸ்வரருக்கு வைர கிரீடம்


திருச்செங்கோடு தங்கரத அர்த்தநாரீஸ்வரர் உற்சவருக்கு திருச்செங்கோடு மோட்டார் வாகன பட்டறை உரிமையாளர்கள்  மற்றும் தொழிலாளர்கள் வழங்கிய வைர கிரீடம்