திருச்செங்கோடு தேர்...
From Tiruchengode Arthanareeswarar Temple |
உயரமோ நான்குமாடி கட்டிடம்
அகளமோ இரண்டானை தடினம்
நான்கு எழடிஉயர சக்கரம்
தேர் சுற்றிலும் பூமாலை தோரணம்சப்பரம் நடுவில் அர்த்தனாரிஸ்வரர் திருக்கோலம்
திரண்டிருந்த மக்களோ பல்லாயிரம்!!!
தேர் சுற்றிவர நான்கு- ரத வீதி
சுற்றிமுடிக்க மூன்று - நாள் தேதி
அன்று தேர் நிலம்சேறும் கடைசி தேதி!!!
அர்ச்சனை பலமுடிந்து முற்பகல் முன்நடக்க
பட்டாசு வேட்டு முழங்க யானைகள் பின்நடக்க
விளம்பரங்கள் கூவிட ஊர் மக்கள் திறன்டிட
அரம்பமாயிற்று அன்றைய தேர் பவனம்!!!
இரும்பு வடம் தேரில்பூட்ட - அரைமைல் கல்
நீண்டது அந்த கனத்த இரும்பு சங்கிலி
சுற்றியிருந்த மக்கள் கைபிடிக்க
நானும் முன்னேறினேன் அதை பிடிக்க
ஆனால் கிடைக்க பெற்றதோ கைகள்தான்-
சங்கிலி இல்லை!!!
சாணை கட்டைகள் முட்டுகுடுக்க
ஊதுவோர் ஊத.. யானைகள் முட்ட
கையோடு கை சேர்த்து கை-சங்கலியால் தேரை கட்டியிழுக்க
அசைந்தாடியது அழங்கார குன்று!!!
வெற்றுகாலை வெயில் வெட்டியெடுக்க
முன்னெறினோம் மதியவெயிலில் மண்டைபிளக்க!!!
குழந்தையை போல் அசைந்தாடியும்
குமரி போல் அண்ணநடையும்
பருவப்பெண் போல் கடைகண்பார்த்தும்
நிலம்சேர்ந்தது அம்மையப்பன் தேர்!!!
சந்தோஷ் செல்வராஜன்
திருசெங்கோடு / டோக்யோ
குறிப்பு:
1. நிலம் சேர்த்தல் = தொடங்கிய இடம் வந்து சேர்தல்
2. அர்த்தனாரிஸ்வரர் = அம்மையப்பன் = ஆண்பாதி (சிவன்) பெண் பாதி (பார்வதி) கலந்த தோற்றம்.இவ்வாறான சிவ-பார்வதி தோற்றத்தை திருச்செங்கோட்டில் மட்டுமே பார்க்க முடியும். இது இத்திருதலத்தின் சிறப்பம்சமாகும்.