திருச்செங்கோடு தேர்...
From Tiruchengode Arthanareeswarar Temple |
உயரமோ நான்குமாடி கட்டிடம்
அகளமோ இரண்டானை தடினம்
நான்கு எழடிஉயர சக்கரம்
தேர் சுற்றிலும் பூமாலை தோரணம்சப்பரம் நடுவில் அர்த்தனாரிஸ்வரர் திருக்கோலம்
திரண்டிருந்த மக்களோ பல்லாயிரம்!!!
தேர் சுற்றிவர நான்கு- ரத வீதி
சுற்றிமுடிக்க மூன்று - நாள் தேதி
அன்று தேர் நிலம்சேறும் கடைசி தேதி!!!
அர்ச்சனை பலமுடிந்து முற்பகல் முன்நடக்க
பட்டாசு வேட்டு முழங்க யானைகள் பின்நடக்க
விளம்பரங்கள் கூவிட ஊர் மக்கள் திறன்டிட
அரம்பமாயிற்று அன்றைய தேர் பவனம்!!!
இரும்பு வடம் தேரில்பூட்ட - அரைமைல் கல்
நீண்டது அந்த கனத்த இரும்பு சங்கிலி
சுற்றியிருந்த மக்கள் கைபிடிக்க
நானும் முன்னேறினேன் அதை பிடிக்க
ஆனால் கிடைக்க பெற்றதோ கைகள்தான்-
சங்கிலி இல்லை!!!
சாணை கட்டைகள் முட்டுகுடுக்க
ஊதுவோர் ஊத.. யானைகள் முட்ட
கையோடு கை சேர்த்து கை-சங்கலியால் தேரை கட்டியிழுக்க
அசைந்தாடியது அழங்கார குன்று!!!
வெற்றுகாலை வெயில் வெட்டியெடுக்க
முன்னெறினோம் மதியவெயிலில் மண்டைபிளக்க!!!
குழந்தையை போல் அசைந்தாடியும்
குமரி போல் அண்ணநடையும்
பருவப்பெண் போல் கடைகண்பார்த்தும்
நிலம்சேர்ந்தது அம்மையப்பன் தேர்!!!
சந்தோஷ் செல்வராஜன்
திருசெங்கோடு / டோக்யோ
குறிப்பு:
1. நிலம் சேர்த்தல் = தொடங்கிய இடம் வந்து சேர்தல்
2. அர்த்தனாரிஸ்வரர் = அம்மையப்பன் = ஆண்பாதி (சிவன்) பெண் பாதி (பார்வதி) கலந்த தோற்றம்.இவ்வாறான சிவ-பார்வதி தோற்றத்தை திருச்செங்கோட்டில் மட்டுமே பார்க்க முடியும். இது இத்திருதலத்தின் சிறப்பம்சமாகும்.
2 comments:
நிலம் சேர்த்தல் என்பதை நிலை சேர்த்தல் என்று மாற்ற வேண்டுகிறேன். தேர் நிலை கொண்டுள்ள இடத்தில் இருந்து வீதி வலம் வந்து மீண்டும் அதே இடம் வந்து சேர்வதைத்தான் நிலை சேர்தல் என்று கூறுவார்கள்
சக்கரங்கள் உள்ளே இரண்டு இருக்கும்
இந்தத் தேருக்குமட்டும் மொத்தம் 6 சக்கரங்கள் உண்டு.
Post a Comment